www.garudabazaar.com

Video: மாநாடு-ல அந்த Scene-க்கு அப்றமும் அழுதுட்டே இருந்தேன்! .. மன்மதனை நினைவுபடுத்திய STR!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

maanaadu Silambarasan exclusive twitter spaces sharings

வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் தொடர்பான விஷயங்கள் கொரோனா இழப்புகளால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய விபரம் முதலில் வெளியானது.

அதன்படி, ஜூன் 21 நண்பகலில் மாநாடு படத்தின் முதல் மற்றும் முழுமையான சிங்கிள் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகும் என குறிப்பிடப்பட்டு டீசர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் ஜூன் 21ல் வெளியான இந்த முழு பாடல் பலரையும் கவர்ந்தது. யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பவதாரணி பாடியுள்ள இந்த பாடலில் படப்பிடிப்பு காட்சிகளுடன் கூடிய லிரிக் வீடியோ இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, ஜூன் 21 இரவு 7.30 மணிக்கு மாநாடு படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் இணைவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் சிலம்பரசன் பேசுகையில், “நீண்ட நாட்கள் கழித்து மாநாடு படத்தில் ஒரு நீளமான காட்சியை பண்ணும் போது, மன்மதனில் மொட்ட மதன் அழும் காட்சி நினைவுக்கு வந்தது. அது ஒரு சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டது. என்னை தொடையில் அடித்தால் தான் அழ வரும். ஆனால் அதே மாதிரி ஒரு ஷாட் இங்கும் நடந்தது. ஷூட் முடிந்தும் என்னால் அழுவதை நிறுத்த முடியவில்லை. நன்றி சார்.” என வெங்கட் பிரபுவை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியவர், “படத்தில் எஸ்.ஜே.சூர்யா சாரும் ஒய்.ஜி.மகேந்திரன் சாரும் கிழிச்சிருக்காங்க. அவர்கள் நடிப்பதை பார்த்து எனக்கு டயலாக் மறந்துவிடுகிறது.” என்கிறார்.

அப்போது உள்ளே வந்த எஸ்.ஜே.சூர்யா, “நாம் படத்தை பற்றி வேற லெவல் என பில்டப் கொடுப்பது தவறில்லை. மெர்சலுக்கும் அப்படி கூறியிருந்தேன். அதே மாதிரி தான். நாம் பொய் சொல்ல போவதில்லை. இல்லையென்றால் வார்த்தை வராது.” என கூறியதுடன் தனக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் எப்போதும் ஒரே மாதிரி தான் நேரம் ஒர்க் அவுட் ஆகும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிம்புவை பேன் இந்தியா படம் பண்ண வேண்டும் என வாழ்த்தினார். சிம்பு கூறும்போது கடந்த வருடம் இதே நாளில் மதுவை நிறுத்தியதாகவும், அதன் பின்னரும் பிரேம்ஜியுடன் நடிப்பது பற்றியும் ஜாலியாக பேசுகிறார்.

ALSO READ: தளபதி65 கொண்டாட்டம் இன்னும் முடியல!! .. வெளியான தெறிக்கவிடும் 2வது போஸ்டர்!

VIDEO: மாநாடு-ல அந்த SCENE-க்கு அப்றமும் அழுதுட்டே இருந்தேன்! .. மன்மதனை நினைவுபடுத்திய STR! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

maanaadu Silambarasan exclusive twitter spaces sharings

People looking for online information on Kalyani Priyadarshan, Maanaadu, Silambarasan TR, Sj suryah, Suresh Kamatchi, V House Productions, Venkat Prabhu will find this news story useful.