www.garudabazaar.com

"ராக்கிங் STR.. Woeww எஸ்.ஜே.சூர்யா Sir..".. மாநாடு டப்பிங் முடிந்து நடிகரின் மாஸ் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளைஞர்களுக்கு பிடித்தமான முன்னணி ஹீரோக்களுள் ஒருவரான எஸ்.டி.ஆர் எனும் சிலம்பரசன், கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் ஹீரோவாக தோன்றினார்.

rocking STR wowee SJSurya udhaya tweet Maanaadu Dubbing

ஈஸ்வரன் படத்தை பொருத்தவரை இந்த ஆண்டு ஜனவரி 14 அன்று ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக, திரையரங்கில் வெளியாகியது. பின்னர் இந்த படம் இந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி  டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக தொடங்கியது. 

இந்நிலையில் எஸ்.டி.ஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாநாடு திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பின் கீழ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தின் போஸ்ட் மற்றும் டப்பிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இந்த படத்தின் பாடல்கள், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விஷயங்களை திரைத்துறையின் பல்வேறு உயிரிழப்புகளால் தள்ளி வைப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் துக்கமான விஷயமாக, ரம்ஜான் நாளில் வெளியாகவிருந்த இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயாரும், பிரபல இயக்குநர் கங்கை அமரனின் மனைவியுமான மணிமேகலை மரணம் அடைந்ததை அடுத்து தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் சிம்புவின் மாநாடு பற்றிய சூடான, அதிகாரப்பூர்வ, ஒரு சூப்பரான அப்டேட்டினை நடிகர் உதயா தற்போது பதிவிட்டுள்ளார்.  ஆம், ​​மாநாடு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் உதயா, தான் டப்பிங் செய்யும் ஒரு ஒளிப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் அவர் பதிவிட்ட ட்வீட்டில், “மாநாடு டப்பிங்... வேற வெவல் காட்சிகள், படம் மிகவும் சுவாரஸ்யமாக வந்துள்ளது..  திரைப்படத்தை பார்ப்பதற்காக காத்திருக்க முடியவில்லை. நமது சிலம்பரசன் டி.ஆர் ராக்கிங்... வாவ் எஸ்.ஜே.சூர்யா சார்...  என் நண்பர், இயக்குநர் வெங்கட் பிரபு உங்களுக்கு நன்றி... முதலாளி சுரேஷ் காமாட்சிக்கு நன்றி!” என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே மாநாடு படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ஜூன் 21 ஆம் தேதி வெளிவருவதாக இப்படத்தின் யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ: அட கடவுளே! 'தொரட்டி' படத்தில் நடித்த 'இளம்' கதாநாயகன் 'மரணம்'! அதிர்ச்சியில் 'திரையுலகம்'!

தொடர்புடைய இணைப்புகள்

rocking STR wowee SJSurya udhaya tweet Maanaadu Dubbing

People looking for online information on Kalyani Priyadarshan, Premgi Amaren, Silambarasan TR, Sj suryah, Suresh Kamatchi, Udhaya, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.