www.garudabazaar.com

அனல் தெறிக்கும் "மாநாடு first Single" அப்டேட்! உச்சகட்ட சந்தோஷத்தில் சிம்பு ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் மாநாடு. 

Silambarasan maanaadu first single date announced Yuvan

சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்கிறார். முன்னதாக கொரோனா சூழல் தந்த துர் செய்திகளால் இப்படத்தின் பாடல்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை அறிவிப்பதை தள்ளி வைத்திருந்தனர். 

Silambarasan maanaadu first single date announced Yuvan

அண்மையில் தான் சிம்புவின் நடிப்பிலான மாநாடு படத்தின் முதல் சிங்கிள் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் U1Records கைப்பற்றியதாகவும், விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 

Silambarasan maanaadu first single date announced Yuvan

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வரும் ஜூன் 21-ஆம் தேதி அன்று ட்விட்டர் ஸ்பேஸில் வெளியிடப்படவுள்ளதாக மாநாடு படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தொடர்ந்து இந்த படத்தின் மற்றைய பாடல்களும், படம் வெளியாகும் தகவல்கள் குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ: "சின்ன வயசுல Parents சினிமாவுக்கே கூட்டிட்டு போகல!".. வைரலாகும் ஆண்ட்ரியாவின் செம்ம மெசேஜ்!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan maanaadu first single date announced Yuvan

People looking for online information on Kalyani Priyadarshan, Maanaadu, Maanaadufirstsingle, Premji Amaran, Silambarasan TR, Sj suryah, Venkat Prabhu will find this news story useful.