இசை அமைப்பாளராகும் இயக்குநர் மிஷ்கின்.. படத்துக்கு டைட்டில் இதான்..! முழு விபரம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதன் முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Director Mysskin Debut Music in Devil Movie மிஷ்கின்

Also Read | விக்ரம் நடிக்கும் ’கோப்ரா’… ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமை… கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான ஒரு திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார்.

இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள்.

Director Mysskin Debut Music in Devil Movie மிஷ்கின்

தமிழின் மிக முக்கியமான இயக்குநர் மிஷ்கின் முதன்முறையாக டெவில் மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதற்கு முன் மிஷ்கின் பல பாடல்களை எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுமுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது. தற்போது டெவில் திரைப்படத்திற்கு நான்கு பாடல்களை கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Also Read | ஆண்டவர் onfire… workout வீடியோ Glimpse-ஐ வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!

Director Mysskin Debut Music in Devil Movie மிஷ்கின்

People looking for online information on Devil, Mysskin, Mysskin Debute Music, Mysskin Music Director will find this news story useful.