www.garudabazaar.com

"அந்த சீன்லயே மொச்ச கொட்ட Song தான் பாடுவாங்க .!".. ரஞ்சிதமே Situation பற்றி விவேக் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

Lyricist Vivek Exclusive Interview about Varisu Ranjithame

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். 'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

Lyricist Vivek Exclusive Interview about Varisu Ranjithame

இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் பல்வேறு விஷயங்களை நம்மிடையே பிரத்தியேகமாக பகிர்ந்து இருக்கிறார்.

அதன்படி இந்த பாடல் காப்பியடிக்கப்பட்டதாக பேசப்பட்டு வருவது குறித்த விளக்கத்தை முதலில் அளித்தார். இது குறித்து அவர் பேசும் போது "நான் இந்த திரைப்படத்தில் வசனகர்த்தாகவும் பணிபுரிகிறேன். நீண்ட நாட்களாகவே ஒரு கிராமிய பாடலை எழுத வேண்டும், மண் சார்ந்த ஒரு பாடல் எழுத வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த படத்தில் அதற்கான சூழல் அமைந்தது.

Lyricist Vivek Exclusive Interview about Varisu Ranjithame

இசையமைப்பாளர் தமனிடம் இது பற்றி கூறினேன். உடனே அவர் குஷி ஆகிவிட்டார்.  பண்ணலாமே நல்லாருக்கும் என்றார். அதற்காக நான் கிராமியம் சார்ந்த வரிகளை எழுதி கொண்டு சென்றேன். இந்த பாடலை பண்ணும் பொழுதே இது தொடர்பான பல கிராமிய பாடல்களை நாங்கள் கவனித்தோம். கிராமிய பாடல்கள் என்றாலே பொதுவான சில மெட்டுக்கள் இருந்தன. மொச்ச கொட்ட பல்லழகி பாடல், தஞ்சாவூர் மண்ணெடுத்து தாலி ஒன்னு செய்ய சொன்னேன், மக்க கலங்குதப்பா, இன்னும் பிரில்லியண்டாக பயன்படுத்திய ஒரு பாடல் என்றால் என்னம்மா பண்ணலாம் டிஸ்கோவுக்கு போகலாம்.. என்ன பல பாடல்கள் இருந்தன.

உண்மையில் இந்த கிராமிய மெட்டின் தொடக்கம் எதுவென்று நம்மால் ட்ராக் செய்ய முடியவில்லை. இது தொடர்ச்சியாக கிராமிய மரபில் தொடரக்கூடிய ஒரு பாடல் மெட்டு.‌ ஆனால் மொச்ச கொட்ட பல்லழகி பாடல் அனைவருக்கும் தெரிந்த ஒரு கிராமிய மெட்டாக இருந்தது.‌ அந்த பாடலை திரைப்படத்தில் பாடுவதாக ஒரு காட்சி வரும். அதன் தொடர்ச்சியாகவே இந்த பாடல் ஒலிக்கும்.

ஆக இந்த பாடலுக்கு படத்திலேயே கிரெடிட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ரஞ்சிதமே பாடலின் தொடக்க வரிகள் வேற மெட்டில் இந்தப் பாடல் மொச்ச கொட்ட பாடல் அல்ல என்பதற்காகவே பாடல் முழுவதும் வேற மெட்டில் கம்போஸ் செய்யப்பட்டு அந்த ஓரிடத்தில் மட்டும் மொச்சை கொட்டை பாடலின் ட்ரிபியூட்டாக அந்த மெட்டு இடம் பெற்றுள்ளது.

இதில் யாருடைய தவறும் இல்லை. குறிப்பிட்ட அந்த பாடலை படத்திலேயே பாடிவிட்டுதான் இந்த பாடல் காட்சிக்கு திரைக்கதை நகரும். அது எடிட்டிங்கில் போகாது என நம்புகிறேன். அது எடிட்டிங்கில் போனாலும் அந்த காட்சியை முடித்த முறையில் எங்களால் வெளியிட முடியும்."என பாடலாசிரியர் விவேக் கூறினார்.

"அந்த சீன்லயே மொச்ச கொட்ட SONG தான் பாடுவாங்க .!".. ரஞ்சிதமே SITUATION பற்றி விவேக் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lyricist Vivek Exclusive Interview about Varisu Ranjithame

People looking for online information on Ranjithame, Thaman, Varisu, Vijay, Vivek will find this news story useful.