www.garudabazaar.com

'ரஞ்சிதமே' ஹிட்டை தொடர்ந்து, 'வாரிசு' படப்பணி குறித்த செம்ம அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

Vijay next varisu movie dubbing starts now sources

Also Read | Bigg Boss வரலாறுலயே இப்டி ஒரு Elimination நடந்ததில்ல.. பரபரப்பை ஏற்படுத்திய கடைசி நேர ட்விஸ்ட்..!!

முன்னதாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஹரி, ஆஷிஷோர் சாலமன் மற்றும் விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Vijay next varisu movie dubbing starts now sources

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பு, எஸ்ஜே சூர்யா, பிரபு, ஷ்யாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வாரிசு படத்தின் டைட்டில் அறிவிப்புடன் சில போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

Vijay next varisu movie dubbing starts now sources

இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வாரிசு திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனிடையே, வாரிசு படத்தின் முதல் சிங்கிளாக "ரஞ்சிதமே" சமீபத்தில் வெளியாகி இருந்தது. எஸ் தமன் இசையில், நடிகர் விஜய் மற்றும் பாடகி மான்சி ஆகியோர் இணைந்து பாடி இருந்த இந்த பாடல், ட்ரெண்டிங்கில் இருந்து வருவதுடன் யூடியூபில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.

Vijay next varisu movie dubbing starts now sources

இதனைத் தொடர்ந்து, வாரிசு திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்கள் எப்போது வரும் என்ற ஆவலிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், வாரிசு படத்தின் டப்பிங் பணிகள் குறித்து தற்போது நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

வாரிசு படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா தனது டப்பிங்கை முடித்துள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

Also Read | பெட்ரூம் படுமோசம்.. பொருளை உடைக்குறீங்க.. நானே Red Card கொடுக்க முடியும் - லெப்ட் ரைட் வாங்கிய கமல்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay next varisu movie dubbing starts now sources

People looking for online information on Varisu, Varisu movie dubbing, Vijay will find this news story useful.