மீண்டும் உண்மைக் கதை.. தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனரின் அடுத்த படம்.. 11 மொழிகளில் ரிலீஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தனது புதிய படத்தினை அறிவித்துள்ளார்.

Also Read | வித்தியாசமான லுக்கில் RJ பாலாஜி.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 1st லுக் போஸ்டர்! முழு விவரம்
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. கடந்த மார்ச் 11 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் பல அரசியல் சினிமா பிரபலங்களாலும் பாராட்டப்பட்டது. காஷ்மீரிலிருந்து காஷ்மீரி இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை அடிப்படை கதை களமாக கொண்டு படம் வெளியாகியது.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார். இதன் பின் படம் பற்றிய விவாதம் இந்தியா முழுமைக்கும் நடந்தது. பிரதமருடனான சந்திப்புக்கு பின் பேசிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, "பிரதமரின், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும் தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
இந்த படத்திற்கு ஹரியானா மற்றும் குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்காளின் அரசுகள் வரி விலக்கை அளித்தன.
15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், 330 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அக்னிஹோத்ரி இந்த திரைப்படத்தை "சுதந்திர இந்தியாவின் சொல்லப்படாத கதைகள்" என்ற தனது முத்தொகுப்பின் (Trilogy) இரண்டாம் பாகமாக அறிவித்தார், இதில் தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் (2019) படமும் அடுத்து வரவிருக்கும் தி டெல்லி ஃபைல்ஸ் படமும் அடங்கும். அதில் காஷ்மீர் ஃபைல்ஸ் இரண்டாவது வெளியீடு ஆகும்.
இப்போது ரசிகர்களின் அனைத்து காத்திருப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'The Vaccine War' என்ற தலைப்புடன் தனது புதிய படத்தினை விவேக் அக்னிஹோத்ரி அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15, 2023 சுதந்திர தினத்தன்று இப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்புரி,பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், உருது மற்றும் அசாமி உள்ளிட்ட 11 மொழிகளில் வெளியாகவுள்ளது. பல்லவி ஜோஷி இப்படத்தை தயாரிக்கிறார்.
Also Read | T20 World Cup போட்டியில் வர்ணனை செய்த லோகேஷ் கனகராஜ்.. #THALAPATHY67 அப்டேட் கேட்டதுக்கு சொன்ன பதில்!