www.garudabazaar.com

பிரபல திரையரங்கில் 'லவ் டுடே' திரைப்படம் செய்த வசூல் சாதனை.. செம்ம தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். 

Love Today Entered Rohini Silver Screen Top 5 of 2022

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Love Today Entered Rohini Silver Screen Top 5 of 2022

இந்நிலையில் இந்த படத்தின் திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தை எட்டியதை ஒட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "லவ் டுடே இன்னும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் மூன்றாவது வாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், லவ் டுடே திரைப்படத்திற்கும் எனக்கும் அளித்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டிவி சேனல்கள், ரேடியோக்கள், யூடியூப் சேனல்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இன்ஃப்லூயன்ஸர்கள் ஆகியோரின் ஆதரவு அளப்பரியது. மீம் கிரியேட்டர்கள், வீடியோ எடிட்டர்கள் என்னை ஆதரித்ததற்காகவும், என்னை ஊக்குவித்ததற்காகவும் என் நன்றியை  தெரிவித்து கொள்கிறேன், அவர்களின் படைப்பாற்றல் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளது. அபரிதமான அன்புடன்

பிரதீப் ரங்கநாதன்" என கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள பிரபல கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லவ் டுடே திரைப்படம்,  2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது என‌ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Love Today Entered Rohini Silver Screen Top 5 of 2022

People looking for online information on Love today, Pradeep Ranganathan, Rohini theatre will find this news story useful.