www.garudabazaar.com

"ஆயிரக்கணக்கான கேரக்டர்களுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்தவர்".. ஆரூர்தாஸ் குறித்து கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வசன கர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

Kamal Haasan Tweet about Aroor Das Demise

Also Read | "ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு வர இதுதான் காரணம்"... சசிகுமாரின் 'காரி' பட இயக்குனர் பேச்சு..

தமிழ் சினிமாவின் பழம் பெரும் இயக்குனர் & வசன கர்த்தா ஆரூர்தாஸ் நேற்று மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் தன்னுடைய 91வது வயதில் இயற்கை எய்தினார்.

தமிழில் நடிகர்கள் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் தொடங்கி மொத்தம் பலநூறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ். பிரபல பழம்பெரும் பாடலாசிரியர் அமரர்  தஞ்சை இராமையாதாஸிடம் கற்றுத்தேர்ந்த இவர், தனது ஊரான திருவாரூரின் பெயரையும் தன் பெயரான யேசுதாஸ் என்பதையும் சேர்த்து  ஆரூர்தாஸ் என்கிற புனைப் பெயருடன் திகழ்ந்தார்.

இவரது வசனத்தில் அன்னை இல்லம், கொங்கு நாட்டு தங்கம், படித்தால் மட்டும் போதுமா, பாசமலர், பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும்,  தாய் சொல்லை தட்டாதே, வேட்டைக்காரன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. இவற்றுள் பல எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் ஆகும். இவர் கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு வடிவேலு நடித்த "ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்" திரைப்படத்தில் எழுத்துப் பணிகளை புரிந்தார்.

Kamal Haasan Tweet about Aroor Das Demise

அத்துடன்  சிவாஜி கணேசன், விஜயகுமாரி நடிப்பில் வெளிந்த, ‘பெண் என்றால் பெண்’ எனும் திரைப்படத்தை ஆரூர்தாஸ் கதை எழுதி இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார். தவிர சீரியல்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், " ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தவர்; என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும்கூட வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி." என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | 'துணிவு' படத்தில் இணைந்த பிரபல முன்னணி பாடலாசிரியர்.. செம்ம ஹிட் COMBO ஆச்சே இது!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Tweet about Aroor Das Demise

People looking for online information on Aroor Das, Aroor Das Demise, Kamal Haasan, Kamal Haasan Tweet will find this news story useful.