www.garudabazaar.com

90s கிட்ஸ்க்கு பிடித்த பவர் ரேஞ்சர்ஸ் நடிகர் டேவிட் ஃபிராங்க் மரணம்.. தற்கொலையா என விசாரணை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90ஸ் குழந்தைகளின் ஃபேவரைட் தொடர் ​​"மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்".

Green Power Ranger Jason David Frank has passed away

1993 முதல் 1996 வரை ஒளிபரப்பான ‘மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரில் கிரீன் பவர் ரேஞ்சர்  டாமி ஆலிவராக நடித்த ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49.

ஃபிராங்கின் மேலாளர் ஜஸ்டின் ஹன்ட், ஃபிராங்க் காலமானார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஃபிராங்க் மரணத்திற்கான காரணத்தையும்  அவர் எப்போது இறந்தார் என்ற தகவலையும் ஹன்ட் குறிப்பிடவில்லை.

Green Power Ranger Jason David Frank has passed away

டேவிட் ஃபிராங்க் தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இறப்பிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்"-ல் ஃபிராங்குடன் இணைந்து நடித்த  பிளாக் பவர் ரேஞ்சர் வால்டர் இம்மானுவேல் ஜோன்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் "எங்கள் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரை இழந்தது வருத்தமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, மஞ்சள் பவர் ரேஞ்சராக நடித்த துய் ட்ராங், 2001 இல் 27 வயதில் கார் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Green Power Ranger Jason David Frank has passed away

People looking for online information on Jason David Frank, Mighty Morphin Power Rangers will find this news story useful.