www.garudabazaar.com

Virgin Diaries : ‘லவ் டுடே’ பரத் & அக்‌ஷயா நடிப்பில் இளசுகளை அள்ளும் விர்ஜின் டைரீஸ் ட்ரெய்லர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.

Love Today Bharath and Akshaya virgin diaries behindwoods

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி வெளியானது. ரெய் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டில் வந்த இப்படம் அதிக வசூலையும் வரவேற்பையும் குவித்தது ‌

இந்த படத்தில் நாயகி இவானாவுக்கு தங்கையாக நடித்த அக்ஷயாவும், நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு நண்பனாக நடித்த பரத்தும் இணைந்து நடித்திருக்கும் புதிய சீரிஸ் வெளியாகவிருக்கிறது.

விர்ஜின் டைரீஸ் என்கிற பெயரில், வரும் ஜனவரி 9-ஆம் தேதி, மதியம் 12 மணி முதல் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்தியேகமக ஒளிபரப்பாக தொடங்க உள்ள இந்த சீரிஸ் பிஹைண்ட்வுட்ஸின் ஒரிஜினல் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீரியஸின் ட்ரெய்லர் வெளியாகி இளைஞர்களிடையே வரவேற்பைக் குவித்து வருகிறது.

குறிப்பாக ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள, “வாழ்க்கையில பிரச்சனைனு சரக்கு அடிப்பதெல்லாம் இப்ப ட்ரெண்ட்லயெ இல்லங்க”, “2வது முறை கேப்பீங்கனு தான் காஃபி வேணாம்னு சொன்னேன்”, “பின்னாடி சுத்துறதுலாம் தப்புனா, என் பைக்ல ஸ்பீடா சுத்துற வீல் கூட பின்னாடி வீல் தாங்க” ஆகிய வசனங்கள் இளசுகளிடையே ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

VIRGIN DIARIES : ‘லவ் டுடே’ பரத் & அக்‌ஷயா நடிப்பில் இளசுகளை அள்ளும் விர்ஜின் டைரீஸ் ட்ரெய்லர்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Love Today Bharath and Akshaya virgin diaries behindwoods

People looking for online information on Akshaya Bhaarath Virgin Diaries, Behindwoods, Behindwoods Originals, Ivana Yuvan Shankar Raja, Love today, Pradeep, Pradeep Ranganathan, Trailer, Virgin diaries will find this news story useful.