www.garudabazaar.com

துணிவு டிரெய்லர் .. 'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரன் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் போட்ட பதிவு ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Director Alponse Puthren Energetic Post About Thunivu Trailer

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த துணிவு படத்தின் டிரெய்லர் முன்னர் அறிவிக்கப்பட்டது போலவே நேற்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வசனங்களும் நிறைந்த இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், பிரேமம் மற்றும் கோல்ட் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் துணிவு டிரெய்லர் குறித்து பதிவு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில்,"துணிவு டிரெய்லர். Kick Ass. நாம் எதிர்பார்த்த அஜித்குமார் வந்துவிட்டார். எனக்கு பிடித்த வசனம் : என்ன மாதிரி ஒரு அயோக்கிய பையன் மேல கை வைக்கலாமா?" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Director Alponse Puthren Energetic Post About Thunivu Trailer

People looking for online information on Ajithkumar, AlposePuthren, Thunivu will find this news story useful.