www.garudabazaar.com

வாரிசு படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? தமிழகம் முழுவதும் ஒட்டப்படும் வைரல் போஸ்டர்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Vijay Varisu Trailer Posters goes Viral on Social Media

Also Read | PS2: பொன்னியின் செல்வன் - 2 படத்திற்காக முழுவீச்சில் களமிறங்கிய பிரபல நடிகர்.. வைரல் போட்டோ

நடிகர்கள் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Varisu Trailer Posters goes Viral on Social Media

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vijay Varisu Trailer Posters goes Viral on Social Media

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் அனைத்து 5 பாடல்களும் வெளியாகியுள்ளன. நேற்று வாரிசு திரைப்படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Varisu Trailer Posters goes Viral on Social Media

தற்போது விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் டிரெய்லர் ரிலீஸை எதிர் நோக்கி உள்ளனர்.  இந்நிலையில் வாரிசு படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என தெரிகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் "இன்றுமுதல் டிரெய்லர்" என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் இன்று நள்ளிரவு முதல் ஒட்டுவதற்கு தயாராக உள்ளன. எனவே நாளை (04.01.23) மாலை 5 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay Varisu Trailer Posters goes Viral on Social Media

இந்த போஸ்டர் புகைப்படங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

 

Also Read | ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Trailer Posters goes Viral on Social Media

People looking for online information on Varisu Trailer Posters, Vijay will find this news story useful.