'தயவுசெஞ்சு பாதுகாப்பா இருங்க'... புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி மிகவும் பிரபலமான லாஸ்லியா தற்போது நடிகர் ஆரியின் புதிய படமொன்றிலும், பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகி வரும் Friednship எனும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடிய நோய் இந்தியாவையும் விட்டு வைக்காத நிலையில், கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் லாஸ்லியா தனது இன்ஸ்டா பக்கத்தில், 'தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்' என மாஸ்க் அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர்களை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.