www.garudabazaar.com

வாரிசு ரிலீஸ்க்கு அப்பறம் தான்.. தளபதி 67 அப்டேட்.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தின் சில தகவல்களை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

Lokesh Kanagaraj about Varisu and Thalapathy 67

Also Read | ஆஸ்காருக்கு அடுத்த உலகின் மிக உயரிய கோல்டன் குளோப் விருதுக்கு தகுதி பெற்ற RRR.. முழு விவரம்  

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ்.

இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், அவரை சிறந்த இளம் இயக்குனர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்'  படமும் ஹிட்டாகி இருந்தது.

Lokesh Kanagaraj about Varisu and Thalapathy 67

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ்  இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருந்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் வேற லெவலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்டை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Lokesh Kanagaraj about Varisu and Thalapathy 67

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் இணைவது உறுதியான நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் தான் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் லத்தி படத்தின் விழாவுக்கு வந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தளபதி 67 படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

குறிப்பாக, "தளபதி 67 படத்தின் பூஜை முடிந்து விட்டது. படப்பிடிப்பு எப்போ தொடங்கும்?" என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "இந்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவித்த பிறகு நான் பேசுவது சரியாக இருக்கும். வாரிசு படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது. வாரிசு ரிலீஸ்க்கு பிறகு போதும் போதும் என்ற அளவிற்கு தளபதி 67 அப்டேட் வரும்". என லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

Also Read | துணிவு சில்லா சில்லா பாட்டு எப்படி இருக்கு? செம்ம பதில் அளித்த லோகேஷ்!

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj about Varisu and Thalapathy 67

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy 67, Varisu will find this news story useful.