www.garudabazaar.com

மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கிக்கொண்ட விஜய்! ரசிகர்கள் நெகிழ்ச்சி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Thalapathy Vijay took photos with Physically Challenged Fan

Also Read | "விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும்".. லோகேஷ் முன்னிலையில் மனம் திறந்த விஷால்!

இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.

Thalapathy Vijay took photos with Physically Challenged Fan

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

Thalapathy Vijay took photos with Physically Challenged Fan

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர்களை பனையூர் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது.

முதல்கட்ட சந்திப்பில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் (ரசிகர்கள்) விஜய்யை சந்தித்து  புகைப்படங்கள் எடுத்தனர்‌. இன்றைய அடுத்த கட்ட சந்திப்பில் செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளார்.  அடையாள அட்டை வைத்துள்ள மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே இந்த சந்திப்புக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Thalapathy Vijay took photos with Physically Challenged Fan

இந்நிலையில் இந்த சந்திப்பில் நடிகர் விஜய், ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக இந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகின்றன.

 

Also Read | பனையூரில் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து.. புது ஹேர் ஸ்டைலில் வந்த தளபதி விஜய் 😍 வைரல் PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay took photos with Physically Challenged Fan

People looking for online information on Physically Challenged Fan, Thalapathy Vijay, Vijay will find this news story useful.