www.garudabazaar.com

தளபதி 67 படத்தில் இணையும் பிரபல நடிகை? வைரலாகும் ட்விட்டர் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். 

Actress Poonam Bajwa Tweet about Thalapathy 67 Movie

Also Read | Bigg Boss 6 : "அசல் பொண்ணுங்களோட மட்டும் Close-ஆ இருந்தாரா?" - மனம் திறந்த போட்டியாளர் சாந்தி.! Exclusive

விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Actress Poonam Bajwa Tweet about Thalapathy 67 Movie

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Actress Poonam Bajwa Tweet about Thalapathy 67 Movie

இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் இயக்குனர் ரத்னகுமாருடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம்  வெளியானது. மேலும் சமீபத்தில் 'ஜில் ஜங் ஜக்' இயக்குனர் தீரஜ், இணை எழுத்தாளராக 'தளபதி 67' படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

Actress Poonam Bajwa Tweet about Thalapathy 67 Movie

இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக‌ உள்ள 'தளபதி 67' படத்தில்  இணைந்துள்ளதாக   ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்த ட்வீட்டை தற்போது நடிகை பூனம் பாஜ்வா நீக்கிவிட்டாலும் இதன்  ஸ்கிரீன் ஷாட் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. நடிகை பூனம் பாஜ்வா, தமிழில் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சேவல், துரோகி, முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Also Read | 'கைதி' இந்தி ரீமேக்கில் நடிக்கும் அமலா பால்.. எந்த கேரக்டரா இருக்கும்? செம தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Poonam Bajwa Tweet about Thalapathy 67 Movie

People looking for online information on Poonam Bajwa, Thalapathy 67 Movie, Varisu, Vijay will find this news story useful.