www.garudabazaar.com

பல விருதுகளை வென்ற புகழ்ப்பெற்ற ஹீரோ காலமானார்... சோகத்தில் திரைத்துறையினர் - ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல விருதுகளை வென்ற மூத்த நடிகர் இயற்கை எய்தியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. 

பிரபல நடிகர் காலமானார் | Legendary james bond actor passed away

ஹாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சீன் கானரி. உலக அளவில் புகழ்ப்பெற்று விளங்க கூடிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். Dr.No, Goldfinger, Diamonds are Forever உள்ளிட்ட இவர் நடித்த திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் ஆஸ்கார் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். 

பிரபல நடிகர் காலமானார் | Legendary james bond actor passed away

இந்நிலையில் 90 வயதான சீன் கானரி காலமாகியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. வயது மூப்பின் காரணமாக, அவர் தூக்கத்திலேயே நேற்று இயற்கை எய்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திரைத்துறையினர் அவருக்கான இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

பிரபல நடிகர் காலமானார் | Legendary james bond actor passed away

மேலும் ரசிகர்களும் சீன் கானரி குறித்தும், அவர் நடித்த ஜேம்ஸ் கதாபாத்திரத்தின் நினைவுகள் குறித்தும் எமோஷனலாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

 

பிரபல நடிகர் காலமானார் | Legendary james bond actor passed away

People looking for online information on James bond, Sean Connery will find this news story useful.