சூப்பர் மேன் ஸ்பைடர் மேனாக நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால்? பிரபல ஹாலிவுட் நடிகரின் ஒபன் டாக்
முகப்பு > சினிமா செய்திகள்ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த ''நோ டைம் டு டை'' (No Time To Die) எனும் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வெளியீட்டு தேதி கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான அச்சங்களுக்கு மத்தியில் நவம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
அண்மையில் ஒரு பேட்டியில் ஜேம்ஸ் பாண்ட் நட்சத்திரம் டேனியல் கிரெய்க் கூறுகையில், ‘சிறுவனாக இருக்கும் போது, சூப்பர்மேன் அல்லது ஸ்பைடர் மேன் ரோலில் நடிப்பதுதான் எனது கனவாக இருந்தது’ என்றார்.
மேலும் நோ டைம் டு டை படத்தில் நடிப்பதுடன் 007 ரோலுக்கு விடை கொடுக்கப் போவதாக கூறிய டேனியல் கிரேக், "மக்கள் எப்போதும் என்னிடம், 'நீங்கள் சிறுவயதில் ஜேம்ஸ் பாண்டாக வேண்டும் என கனவு கண்டிருக்க வேண்டும்' என்று கூறுகிறார்கள். ஆதால் அது அப்படி இல்லை. நான் ஒருபோதும் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என நினைத்ததில்லை. மாறாக சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், இன்விஸிபில் மேன், ஓல்ட் கவ்பாய் என வகை வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கனவு கண்டுள்ளேன். ஆனால் பாண்ட் என்னை விடுவதாக இல்லை. இது இப்போது நினைத்தால் இனிய முரணாகத் தெரிகிறது. " என்றார்.
கேசினோ ராயல் (2006), குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008), ஸ்கைஃபால் (2012) மற்றும் ஸ்பெக்டர் (2015) ஆகிய படங்களைத் தொடர்ந்து, நோ டைம் டு டை, டேனியல் கிரேக்கின் ஐந்தாவது ஜேம்ஸ் பாண்ட் பட வரிசை என்பது குறிப்பிடத்தக்கது.