www.garudabazaar.com

அசத்தும் Legend சரவணன் - ஊர்வசி ரவுத்தலாவின் 'Dance'.. வெளியானது 'The Legend' பாடல் வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து, கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'.

legend saravanan movie the legend popopo video song released

Also Read | உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் லால்சிங் சத்தா.. புதுத் தமிழ் போஸ்டருடன் வெளியான கேரக்டர் UPDATE!

உல்லாசம், விசில் உள்ளிட்ட திரைப்படங்களையும், ஏராளமான விளம்பர படத்தை இயக்கிவர்களுமான ஜேடி - ஜெர்ரி ஆகியோர் தான், தி லெஜண்ட் திரைப்படத்தையும் இயக்கி உள்ளனர்.

அதே போல, பிரபல இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தி லெஜண்ட் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர், ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, ட்ரெண்டிங் லிஸ்டிலும் இடம் பிடித்திருந்தது. மேலும், தி லெஜண்ட் திரைப்படம், ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக, பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வரும் ஜூலை 28 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆக உள்ளது. டிரைலர் மற்றும் பாடல்கள் கொடுத்த ஹிட் காரணமாக, படத்தின் ரீலீஸையும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.

 legend saravanan movie the legend popopo video song released

பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா, தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும், மறைந்த ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட நடிகர் விவேக் நடித்த கடைசி படம் 'தி லெஜண்ட்' என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் யோகி பாபு, நாசர், பிரபு, கீத்திகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தி லெஜண்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'Popopo' என்ற பாடலின் வீடியோவையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

 legend saravanan movie the legend popopo video song released

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே ஹிட்டடித்த "Popopo" பாடலை மதன் கார்க்கி எழுதி உள்ளார். மறைந்த பாடகர் KK, பிரசாத் S N மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர். இந்த பாடலின் வீடியோவில், லெஜண்ட் சரவணன் மற்றும் ஊர்வசி ரவுத்தலா ஆகியோர் நடனமாடும் நிலையில், அனைத்து ஸ்டெப்களும் அசத்தலாக அமைந்துள்ளது. இந்த டான்ஸ் வீடியோ விரைவில் Trend ஆகும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

 legend saravanan movie the legend popopo video song released

இதனால், இந்த பாடலின் வீடியோவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | "என் பையன் Pass ஆயிட்டான், அதுவும்.." உச்சகட்ட மகிழ்ச்சியில் கலா 'மாஸ்டர்' போட்ட ட்வீட்!!

legend saravanan movie the legend popopo video song released

People looking for online information on Legend Saravanan movie, The Legend movie, The Legend popopo video song will find this news story useful.