லெஜண்ட் சரவணன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ’புரடக்ஷன் நம்பர் 1’ திரைப்படத்தை ஜேடி & ஜெர்ரி இயக்கி வருகின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பில், பெரும் பொருட்செலவில் உருவான பிரம்மாண்ட அரங்கில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் லெஜண்ட் நூற்றுக்கணக்கான நடனக்கலைஞர்களோடு நடனமாடினார்.

இதைத்தொடர்ந்து ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற ஷூட்டில் ஒரு அதிரடி சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடலாரிசியர் பா.விஜய் ஒரு பாடலை எழுதியுள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதற்கிடையில், பொங்கலையொட்டி தன் படக்குழுவினரை ‘லெஜண்ட்’ சிறப்பாக கவனித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சுமார் 200 பேர் அடங்கிய படக்குழுவினருக்கு லெஜண்ட் ஸ்பெஷல் பொங்கல் பரிசுகள் வழங்கியுள்ளார்.
Tags : Legend Saravanan, Harris Jayaraj, Pa. Vijay