”கமலின் ஆளவந்தானுக்கு முதலில் ஹாரிஸ் தான்...” பிரபல தயாரிப்பாளர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற Behindwoods Gold Mic விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு The Icon of Inspiration Trend Setting விருது வழங்கப்பட்டது.

Harris Jayaraj was first approached to score Aalavandan says Kalaipuli S Thanu

விருது வழங்கி கெளரவித்த கலைப்புலி எஸ்.தாணு முதல் முதலில் ஹாரிஸை தான் கமலின் ஆளவந்தான் படத்துக்கு இசையமைக்க கேட்டிருந்ததாகவும், ஆனால் அவர் கவுதம் மேனனிடம் வாக்குறுதி அளித்திருந்ததால் அது கை நழுவி விட்டதாகவும் தெரிவித்தார்.

பின் தன் இசைப்பயணம் பற்றி பகிர்ந்து கொண்ட ஹாரிஸ். 12 வயதில் இசைக்கலைஞராக பணியாற்றத் தொடங்கி கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரிடம் 600க்கு மேற்பட்ட படங்களில் பணியாற்றியதாக தெரிவித்தார்.

மேலும், சம்பளமாக 200 ரூபாய் கூட பெற்றிருப்பதாக ஹாரிஸ் தெரிவித்தார்.

”கமலின் ஆளவந்தானுக்கு முதலில் ஹாரிஸ் தான்...” பிரபல தயாரிப்பாளர் தகவல் வீடியோ