கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை மீறி பொது மக்கள் சாலைகளில் சகஜமாக சுற்றி திரிவதை நம்மால் பார்க்க முடிகின்றது. நோயின் முக்கியத்துவம் தெரியாமல் மக்கள் நடந்து கொள்வதைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “இத்தாலியில் அரசு சொல்வதை கேட்காமல் இருந்த மக்களின் நிலைமை தற்போது பிணத்தை புதைக்க கூட இடம் இல்லாமல் அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமை நமக்கும் வந்துவிடக் கூடாது. தயவு செய்து யாரும் வெளியே போகாதீங்க,'' என்கிறார். தொடர்ந்து அந்த வழியாக வெளியில் சென்ற ஒருவரை லாரன்ஸ் கூப்பிட்டு,'' 20 நாள் லீவு கொடுத்திருக்கிறார்கள் அதனால் அப்பா அம்மாவை பார்க்க வீட்டிற்கு செல்கிறேன் என்கிறாயே.
இது என்ன பொங்கல் தீபாவளினு நெனச்சிட்டியா. அப்பா அம்மா கூட சந்தோசமா இருக்க போறேன்னு தானே சொன்ன.. அவங்கள சாவடிக்க போற நீ." நீ போய் பஸ்ல உட்காருவ. அங்க யாருக்காவது கொரோனா இருந்தால் உனக்கு தொற்றிக்கொள்ளும். அதன்பிறகு நீ உன் அப்பா அம்மாவை கட்டி பிடித்தால் அது அவர்களுக்கும் பரவும். அதனால நீ வீட்டுக்கு போக வேணாம். இதெல்லாம் முடிஞ்சபிறகு எவ்ளோ வேணும்னாலும் சேர்ந்து சந்தோசமாக இருக்கலாம். உன் காலில் விழுந்து கேட்கிறேன் தயவு செய்து வெளியே போகாதே” என கேட்டுக் கொள்கிறார்.
#StayHomeStaySafe pic.twitter.com/KMxsbWXf0O
— Raghava Lawrence (@offl_Lawrence) March 25, 2020