www.garudabazaar.com
iTechUS

Rudhran : "லாரன்ஸ், PBS டான்ஸ் அள்ளுதே".. கலக்கும் 'பாடாத பாட்டெல்லாம்' Remix

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வரும் ருத்ரன் படத்தில் இருந்து முதல் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.

Lawrence priya bhavani shankar rudhran paadatha pattellam

Image Credit : Paadatha Patellam Youtube

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம், 'ருத்ரன்'. தயாரிப்பாளராக இருந்து இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார் கதிரேசன்.

ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள நிலையில், இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடிக்கிறார். திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

Image Credit : Paadatha Patellam Youtube

மேலும் இந்த திரைப்படம், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான "பாடாத பாட்டெல்லாம்" என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை தான் ருத்ரன் படத்தில் ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

Image Credit : Paadatha Patellam Youtube

ருத்ரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் சூழலில், பாடாத பாட்டெல்லாம் பாடலை இசை அமைப்பாளர் தரண் குமார் ரீகிரியேட் செய்துள்ளார். மேலும் இந்த லிரிக் வீடியோவில், பாடலுக்கு ஏற்ப லாரன்ஸின் அசத்தலான டான்ஸ் ஸ்டெப்களும் இடம்பெற்றுள்ளது பாடலுடன் சேர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Lawrence priya bhavani shankar rudhran paadatha pattellam

People looking for online information on Paadatha Patellam, Priya Bhavani Shankar, Raghava Lawrence, Rudhran, S Kathiresan will find this news story useful.