www.garudabazaar.com

அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி - 2.. அஜய் ஞானமுத்து வெளியிட்ட டைட்டில் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருள்நிதி அடுத்து நடிக்கும்  டிமான்ட்டி காலனி - 2 படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Arulnithi Priya Bhavani Shankar Demonte Colony 2 Title Look Poster Released

Also Read | நயன்தாரா நடிக்கும் CONNECT.. இடைவேளையே இல்லாத தமிழ் படம்! சென்சார் விவரம் & ரன்னிங் டைம்!

தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் அருள்நிதி. இவரின் வித்தியாசமான திரைக்கதை தேர்வுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

குறிப்பாக டிமாண்டி காலனி, கே 13, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற த்ரில்லர் படங்கள் அருள்நிதியை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான டைரி, தேஜாவு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

Arulnithi Priya Bhavani Shankar Demonte Colony 2 Title Look Poster Released

இதில் டைரி படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கினார். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Arulnithi Priya Bhavani Shankar Demonte Colony 2 Title Look Poster Released

தற்போது அருள்நிதி டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தின் கதை திரைக்கதையை அஜய் ஞானமுத்து எழுதி இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். சாம் CS இசையமைக்க, தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Arulnithi Priya Bhavani Shankar Demonte Colony 2 Title Look Poster Released

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் & தயாரிப்பாளர் அஜய் ஞானமுத்து டிமான்ட்டி காலனி - 2 படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Also Read | கோவாவில் சுற்றுப்பயணம்..கிளாமர் லுக்கில் அசத்தும் '96' பட நடிகை கௌரி கிஷன்!

தொடர்புடைய இணைப்புகள்

Arulnithi Priya Bhavani Shankar Demonte Colony 2 Title Look Poster Released

People looking for online information on Arulnithi, Demonte Colony 2, Priya Bhavani Shankar will find this news story useful.