பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இளையராஜாவுக்காக பாரதிராஜா தலைமையில் களமிறங்கும் திரையுலகம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 28, 2019 05:39 PM
தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் தனது இசையால் பல சாதனைகள் புரிந்தவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அவற்றில் பெரும்பாலானவை பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்த பாடல்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவிற்கும் இளையராஜாவிற்கும் அவர் பணிபுரிந்து வந்த இடம் சம்பந்தமாக பிரச்சனை எழுந்துள்ளது.
இதனையடுத்து இயக்குநர் பாராதிரராஜா தலைமையில் பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, சீமான், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் இன்று (நவம்பர் 28) பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது அவர்களை உள்ளே அனுமதிப்பது தொடர்பாக சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இளையராஜாவுக்காக பாரதிராஜா தலைமையில் களமிறங்கும் திரையுலகம் வீடியோ