#Breaking : 'மாஸ்டர்' படத்தின் கதை இதுதான்... முதல்முறை மேடையில் 'க்ளூ'வாக உடைத்த லோகேஷ் கனகராஜ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று நடந்து முடிந்தது.

மாஸ்டர் ஆடியோ லான்ச், விஜய்யின் மாஸ்டர் கதை பற்றி லோகேஷ் கனகராஜ் l Thalapathy Vijay Master Audio Launch Lokesh Kangaraj Breaks The Story Of

இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் "இது எனது முதல் ஆடியோ லான்ச். விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன உடனேயே அவர் ஓகே சொல்லி விட்டார். இந்தப் அப்படத்தில் வேறு ஒரு விஜய்யை நீங்க பாக்கலாம். எங்க குழுவிலேயே எல்லாரும் 'வாத்தி' தான் படத்தின் தலைப்பாக இருக்கும் என்று நினைத்தனர். ஆனால் மாஸ்டர் என்று அறிவித்தது பலருக்கும் ஷாக் ஆக தான் இருந்தது." என்று கூறினார்.

மேலும் "இந்த படத்தில் நான் புதிதாக பல விஷயங்களை கற்று கொண்டேன். மேலும் இந்த அப்படத்தின் போஸ்டர்களே போதும் படத்தின் கதையை சொல்ல. முதல் போஸ்டர் ஹீரோ இன்ட்ரோ. இரண்டாம் போஸ்டர்  இன்டெர்வெல் பகுதி. மூன்றாவது போஸ்டர் தான் மாஸ் கிளைமாக்ஸ்' என்று படத்தின் கதையை க்ளூவாக உடைத்தார்.

Entertainment sub editor