தளபதி விஜய் மாஸ்டர் Audio Launch la தல அஜித் பத்தி என்ன பேசுனாரு தெரியுமா ? குட்டிக் கத என்ன தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த ஒரு வாரமாக 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் இதோ வந்துவிட்டது.
விழாவில் தளபதி விஜய் பேசியதாவது, ''இந்த ஆடியோ லாஞ்ச்ல பல பேரு கலந்துக்க முடியலனு வருத்தப்பட்டுட்டு இருப்பீங்க. ஆனா அத விட எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. ஏன் இதுலாம்னா ஏன்னா லாஸ்ட் படத்தோட ஆடியோ லாஞ்ச்ல ஒரு பிரச்சனை ஆச்சு அதான்.
விஜய் சேதுபதி கிட்ட என் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டாங்கனு கேட்கனு நினச்சேன். ஏன்னா அவர் நினச்ச ஈஸியா அவாய்ட் பண்ணிருக்கலாம். அதுக்கு அவர் சொன்னாரு உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் அதான். அப்போதான் புரிஞ்சது. அவரோட பேருல மட்டும் இல்ல மனசுலயும் இடம் கொடுத்து வச்சுருக்காரு.
லோகேஷ் சீன் பேப்பர் இல்லாம தான் வொர்க் பண்ணாரு. என்னிடம் நீங்க அந்த மாதிரி பண்ணுங்கனு சொல்வாரு. ஆனா எந்த மாதிரினு சொல்லல. நான் பெரிய மன உளச்சலுக்கு ஆளாகிட்டேன். அப்புறம் போய் சொல்லிட்டேன். எனக்கு அந்த மாதிரி இந்த மாதிரிலாம் வேண்டாம். ஒரே மாதிரி ஸ்கிரிப்ட் பேப்பர் கொடுனு சொன்னேன்.
நதியை ஒரு இடத்துல பூக்கள் தூவி வரவேற்கிறவங்க இருப்பாங்க. நதி போய்கிட்டே இருக்கும். ஒரு இடத்துல பிடிக்காதவங்க கல் எறிவாங்க நிதி போய்கிட்டே இருக்கும். அதாங்க நம்ம வாழ்க்கை. நாம நம்ம கடமையை சரியா செஞ்சுட்டு நதி மாதிரி போய்க்கிட்டு இருக்கணும்'' என்றார்.
அப்பொழுது தொகுப்பாளர் உங்க காஷ்டியூம் சூப்பரா இருக்குனு சொல்ல அதற்கு பேசிய விஜய், என்னோட காஷ்டியூம் டிஷைனர்க்கு தேங்க்ஸ் சொல்லணும். அவங்க தான் நல்லா டிரெஸ் பண்ணுங்கனு சொன்னாங்க. அதான் என்னோட நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு வந்தேன்'' என்றார்.
பின்னர் தொகுப்பாளர் இப்போ இருக்க விஜய் பழைய விஜய்ய மீட் பண்ணா என்ன சொல்வீங்க என்று கேட்க , அதற்கு விஜய், நிம்மதியான வாழ்க்கை. என்ன அப்போ ரெய்டு எதுவும் வரல. இப்பவும் சந்தோஷமா இருக்கேன் என்றார். பின்னர் முத்தத்தை திருப்பி கொடுக்கணும் என்ற போது விஜய் மேடையை விட்டு இறங்கி வந்து விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுத்தார்.
தளபதி விஜய் மாஸ்டர் AUDIO LAUNCH LA தல அஜித் பத்தி என்ன பேசுனாரு தெரியுமா ? குட்டிக் கத என்ன தெரியுமா ? வீடியோ