Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

"ஸ்பெஷல் மீட்டிங்".. செல்வராகவன் குடும்பத்தினருக்கு Surprise கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை அவர் இயக்கி உள்ளார்.

tamilnadu cm mk stalin visits selvaraghavan family

Also Read | அசத்தலான புதிய ஆக்சன் காட்சிகளுடன் 'பொன்னியின் செல்வன்'.. வெளியான சூப்பர் GLIMPSE வீடியோ!

அடுத்ததாக, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள "நானே வருவேன்" என்னும் திரைப்படம், செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 11 ஆண்டுகள் கழித்து, நடிகர் தனுஷ் தனது சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நானே வருவேன் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

tamilnadu cm mk stalin visits selvaraghavan family

இயக்கத்தில் ஒரு ரவுண்டு வந்த செல்வராகவன், பீஸ்ட், சாணிக் காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருந்தார். பகாசூரன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் செல்வராகவன், நானே வருவேன் திரைப்படத்தில் கூட நடிகராக களமிறங்கி உள்ளார்.

இந்நிலையில், தனது வீட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தது தொடர்பான் புகைப்படம் ஒன்றை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

tamilnadu cm mk stalin visits selvaraghavan family

செல்வராகவன் வீட்டிற்கு திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினருடன் நேரத்தையும் செலவழித்தார். இதன் பின்னர், அனைவருடனும் இணைந்து புகைப்படம் ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் எடுத்துக் கொண்டார். இதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த செல்வராகவன், தனது கேப்ஷனில், "மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலின் எனது குடும்பத்தினரை சந்தித்தார். என்னவொரு ஸ்பெஷலான மீட்டிங்" என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.

tamilnadu cm mk stalin visits selvaraghavan family

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இயக்குனர் செல்வராகவன் குடும்பத்தினரை நேரில் வந்து சந்தித்தது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | 'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்ட காஜல் அகர்வால்.. கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம்!

தொடர்புடைய இணைப்புகள்

tamilnadu cm mk stalin visits selvaraghavan family

People looking for online information on CM MK Stalin, Cm mk stalin visits selvaraghavan family, Selvaraghavan will find this news story useful.