www.garudabazaar.com

"இந்த வீட்ல தங்குனா குழந்தை பிறக்குமா".. பாண்டியன் ஸ்டோர்ஸ் -ஐ வெச்சு செஞ்ச KPY பெர்ஃபார்மென்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ், சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு என விஜய் டிவியில் எக்கச்சக்க ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவை அனைத்திற்குமே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

KPY Champion season 4 pandian stores serial spoof video

Image Credit : vijay television

Also Read | RC15: ராம் சரணின் மிரட்டலான லுக்கில் தமிழில் வெளியான FIRST LOOK போஸ்டர்..! இதோ

ரியாலிட்டி ஷோக்களை போலவே, ஏராளமான சீரியல்களும் கூட மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெறும் தொடர்களும் உள்ளன. அந்த வகையில் மிக முக்கியமான சீரியல் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

சகோதரர்கள் சிலருக்கு இடையே நடைபெறும் பாச பின்னணியை வைத்து தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இயங்கி வருகிறது. ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பாக கடந்து வருவதால் இந்த தொடரின் பார்வையாளர்கள் பலரும் மிக ஆவலுடனும் இதனை கண்டுகளித்து வருகின்றனர்.

KPY Champion season 4 pandian stores serial spoof video

Image Credit : vijay television

அதே வேளையில், சில தகராறு காரணமாக ஜீவா மற்றும் மீனா ஆகியோர் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருந்து வெளியேறவும் செய்திருந்தனர். மறுபக்கம், கண்ணன் மீது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியதால் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருக்க, அடுத்தடுத்து சில பரபரப்பான திருப்பங்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அரங்கேறி வருகிறது.

அப்படி ஒரு சூழலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை வைத்து விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடந்த spoof வீடியோவும் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொடர் வெற்றிக்கு பிறகு தற்போது கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

KPY Champion season 4 pandian stores serial spoof video

Image Credit : vijay television

இதன் நான்காவது சீசன் சமீபத்தில் ஆரம்பமான நிலையில், முந்தைய சீசன்களை போல இதுவும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், சமீபத்திய எபிசோடு ஒன்றில் சீரியல் Spoof  சுற்று நடந்ததாக தெரிகிறது. அப்படி இருக்கையில், பரபரப்பான கட்டங்கள் நிறைந்து சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியை வைத்து Spoof காமெடியும் நடந்தது.

KPY Champion season 4 pandian stores serial spoof video

Image Credit : vijay television

அந்த தொடரில் சீரியஸாக, பரபரப்பாக செல்லும் விஷயங்களை அப்படியே தலைகீழாக மாற்றி காமெடி செய்து அங்கிருந்த அனைவரையும் மட்டுமில்லாமல், அனைத்து பார்வையாளர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளனர்.

Also Read | PS2: பொன்னியின் செல்வன் - 2.. படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! செம்ம

தொடர்புடைய இணைப்புகள்

KPY Champion season 4 pandian stores serial spoof video

People looking for online information on KPY Champion season 4, Pandian stores, Pandian stores serial will find this news story useful.