www.garudabazaar.com

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகும் இளம் நடிகை.. அவருக்கு பதில் இனி இவங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இருந்து வருகிறது. சகோதரர்கள் சிலரின் இடையேயுள்ள பந்தம் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு எபிசோடிலும் ஏதாவது ஒரு விஷயம் விறுவிறுப்பாக சென்று கொண்டே இருப்பதால், மக்களும் இதனை ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

Pandian Stores Actress Sai gayatri quits from serial

Image Credit : vijay television

Also Read | சிறந்த நடிகன்னு அப்பவே சொன்னேன்.. சூரி பத்தி சரியா கணிச்ச விஜய் சேதுபதி!!

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகும் சூழ்நிலையில், விரைவில் 1150 எபிசோடுகளையும் அடைய உள்ளது.

Pandian Stores Actress Sai gayatri quits from serial

Image Credit : vijay television

விலகும் பிரபல நடிகை

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவ்வப்போது ஏராளமான நடிகர், நடிகைகளும் மாறி வருகிறார்கள். முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை மூன்று நடிகைகள் மாறிவிட்ட சூழலில், கண்ணனின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா ரோலிலும் சிலர் மாறி கொண்ட படி இருக்கின்றனர். அப்படி இருக்கையில் தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகி உள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Pandian Stores Actress Sai gayatri quits from serial

Image Credit : vijay television

கடைசி சகோதரராக வரும் கண்ணன் என்பவரின் மனைவியாக நடிகை சாய் காயத்ரி, ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூழலில் தற்போது அவர் இதிலிருந்து விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சாய் காயத்ரி எடுத்த முடிவு

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சாய் காயத்ரி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதுவரை தனது கதாபாத்திரத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள சாய் காயத்ரி, தன்னுடைய முடிவுக்கு மதிப்பும், சம்மதமும் தெரிவித்த விஜய் டெலிவிஷனுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

Pandian Stores Actress Sai gayatri quits from serial

Image Credit : vijay television

இந்த நிலையில், இனிமேல் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது குறித்து சில தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி இதற்கு முன்பு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது.

Also Read | சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்'.. "அந்த ஒரு ஷாட்டை கண்டிப்பா எடுக்கனும்".. வெற்றிமாறன் EXCLUSIVE தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores Actress Sai gayatri quits from serial

People looking for online information on Pandian stores, Pandian Stores Actress, Pandian stores serial, Sai Gayatri will find this news story useful.