கொலைகாரனுக்கு கிடைத்த தீர்ப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள 'கொலைகாரன்' திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை தின சிறப்பு திரைப்படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kolaigaran Cleared Censor With UA

இந்த நிலையில் இன்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடியே 'யூஏ' சான்றிதழை அளித்தனர். இதனையடுத்து இந்த படம் சென்சார் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

ஆண்ட்ரூ ஏகாம்பரம் என்பவர் விறுவிறுப்பாக இயக்கியுள்ள இந்த படத்தில் முதல்முறையாக விஜய் ஆண்டனியும் ஆக்சன் கிங் அர்ஜூனும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படம் போன்ற கதையம்சத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.