Battery
The Legend
Maha others
www.garudabazaar.com

Koffee With Karan 7: "Husband இல்ல.. Ex Husband" - தவறை சுட்டிக்காட்டி திருத்தம் செய்த Samantha.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா அண்மையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் சென்சேஷனல் நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Koffee With Karan 7 Not husband its Ex Husband Says Samantha

பிரபல ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் காபி வித் கரண் நிகழ்ச்சி 7 சீசன்களாகத் தொடர்ந்து வருகிறது. இதனுடைய 7-வது சீசனில் தற்போது சமந்தா மற்றும் பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கரண் ஜோகர் இயக்கிய கபி குஷி கபி கம் திரைப்படத்தை குறிப்பிட்டு, “வாழ்க்கை கே3ஜி (கபி குஷி கபி கம்) போல் இருக்கும் என்று நீங்கள் காட்டினீர்கள், ஆனால் வாழ்க்கை கேஜிஎப் போன்று இருக்கிறது.. இதுதான் மகிழ்ச்சியில்லாத திருமணங்களுக்கு காரணம்” என்று சமந்தா குறிப்பிட்டு இருந்தார்.

Koffee With Karan 7 Not husband its Ex Husband Says Samantha

இந்த வீடியோ புரோமோவில் வெளியானதும் வைரலானது. இதனை தொடர்ந்து சமந்தா & அக்ஷய் குமார் இருவரும் ‘ஓ ஆண்டவா படலுக்கு நடனமாடினர். இந்நிலையில்தான் கரண் ஜோகர், இந்நிகழ்ச்சியில் சமந்தாவின் விவாகரத்து குறித்த கேள்வியை கேட்கும்பொழுது, “உங்களுடைய கணவர்” என்று குறிப்பிட்டு பேச, அப்போது இடைமறிக்கும் சமந்தா, “முன்னாள் கணவர்” என்று திருத்தம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Koffee With Karan 7 Not husband its Ex Husband Says Samantha

கடைசியாக புஷ்பா படத்தில், ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய சமந்தா, சகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்களில் நடிக்கத் தொடங்கினார். முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Koffee With Karan 7 Not husband its Ex Husband Says Samantha

People looking for online information on Akshay Kumar, Disney Hotstar, Disney Plus Hotstar, Karan Johar, Koffee With Karan 7, Samantha, Samantha ruth prabhu will find this news story useful.