www.garudabazaar.com

தனி ஹீரோயினாக சமந்தா நடிக்கும் 'யசோதா'.. புது போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சமந்தா நாயகியாக நடிக்கும் 'யசோதா' படத்தை தங்களின் 14வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.

Samantha Action Thriller Yashoda Talkie shoot finished

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிப்படுத்தி “ஃபேமிலிமேன் 2” தொடர் மூலம் இந்திய அளவில் சிறந்த நடிகையாக,  நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார்.

நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். ஹரி-ஹரீஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படம் வரும் ஆகஸ்ட் 12 உலகம் முழுதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

Samantha Action Thriller Yashoda Talkie shoot finished

இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

Samantha Action Thriller Yashoda Talkie shoot finished

ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது. தற்போது படக்குழு புதிய போஸ்டர் மூலம் படத்தின் அனைத்து வசன படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் பின் தயாரிப்பு பணிகளும் துவங்கி உள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Action Thriller Yashoda Talkie shoot finished

People looking for online information on Samantha, Samantha ruth prabhu, Yashodha will find this news story useful.