வந்த வியாதிக்கு 'மருந்தில்லா' தேசம்... 'பிரபல' கலை இயக்குநர் ஆதங்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பாதிப்பை தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதகதியில் எடுத்து வருகின்றது. இதில் ஒன்றாக நமக்காக சேவை செய்யும் மருத்துவர்கள், துப்பரவு பணியாளர்களுக்காக வீட்டு வாசல் மற்றும் பால்கனிகளில் இருந்து கைத்தட்டுங்கள் என்பதை மக்கள் தவறாக புரிந்து கொண்டு கூட்டம் கூட்டமாக சென்று கைத்தட்டினர். இதற்கு கோ, அனேகன், காப்பான் போன்ற படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய டி.ஆர்.கே. கிரண் கோபம் மிகுந்த கவிதை ஒன்றை வெளியிட்டு ஆதங்கப்பட்டு இருக்கிறார்.

வந்த வியாதிக்கு 'மருந்தில்லா' தேசம்| kiran tweet about Corona

சொல்லப்பட்ட நோக்கத்தையே தவறாக புரிந்துக்கொண்டு செயல்பட்ட மக்களை குறித்து கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் “கை_தட்டுங்கள். நாங்கள் கையாலாகாதவர்கள் என்று கைதட்டுங்கள்.! எங்கள் தேசம் மாட்டுக்கும் சாணிக்கும் சிறந்தது என்று கைதட்டுங்கள்.!

ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லா தேசம் என்று கைத்தட்டுங்கள்.! வந்த வியாதிக்கு மருந்தில்லா தேசம் இதுவென மனம் குளிர்ந்து கை தட்டுங்கள்.!

பொருளாதாரம் அனைத்தும் பூமிக்குள் போனதென்று சந்தோசமாக கை தட்டுங்கள்.!

போட்ட பணம் எல்லாம் போன இடம் தெரியலன்னு பொறுமையோடு கை தட்டுங்கள்.! உழைத்து சேர்த்த பணம் வரியாக போகுதுன்னு வரிசையாக கை தட்டுங்கள்.!

கேள்வி கேட்பவர் எல்லாம் வேள்வியில் மரித்துப் போக.! நீதிமன்றங்கள் கூட நிதிக்காக அலைகின்றதென அழகாக கை தட்டுங்கள்.!

கரவொலியால் கரைபடிந்த உங்கள் கரங்கள் சுத்தமாகட்டும்.!

ஓட்டுக்காக காசு வாங்கிய உங்கள் கைகள் பலமாக ஒலி எழுப்பட்டும்.! கேள்வி கேட்க துணிவின்றி உங்கள் இதயத்தின் துடிப்பு, கைத்தட்டலாக எதிர் ஒலிக்கட்டும்.!

கிண்டலும் கேலியுமாக நாட்டை துண்டுதுண்டாக கொன்றழிக்கும் மதத்திற்கும் சாதிக்கும் கை தட்டுங்கள்.!

மனிதன் வாழ வேண்டாம் என்று கை தட்டுங்கள்.! மூளையை விலைக்கு விற்ற முட்டாள்கள் என்று கை தட்டுங்கள்.!

உரிமையை பறிகொடுத்த ஊதாரிகள் என்று கை தட்டுங்கள். சாலையில் நின்று கை தட்டுவதற்கு கூச்சம் என்றால்.!

மொட்டை மாடிக்கு சென்று மொத்தமாக கை தட்டுங்கள்.!

இந்த நாட்டை காப்பாற்ற இப்படியாக கைத்தட்டி உற்சாகமூட்டுவோம்.!

உங்கள் உற்சாகத்தால்,.. ஓடி வந்த பிணி கூட ஒளிந்துகொள்ள இடம் தேடும்!

மனிதன் சாகவேண்டும் கை தட்டுங்கள்!” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor