இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி இருக்கிறார். பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ பிரதமர் அறிவித்த 21 நாள் முழு அடைப்பை வரவேற்கிறேன், கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பு தருவேண்டும். காய்கறி, பால் மற்றும் மளிகை போன்ற அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்கும் என அரசு அறிவித்திருக்கும் வேளையில் தயவு செய்து கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
I welcome this 21daylockdown announced by our PM nd Request all of you 2 cooperate fully,as dis will break d chain of coronavirus spread.
And Govt has ensured essential supplies will b available,so let’s not throng grocery&veg shops
Let’s fight this together #CoronavirusLockdown
— Dhanush (@dhanushkraja) March 24, 2020