மாப்பிள்ளை இதுல கூடவா லேட்டு... சுந்தர்.சி குறித்து குஷ்பூ சொன்ன கல்யாண சீக்ரெட்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர்.சிக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததை பற்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவரது கணவரான சுந்தர்.சி தற்போது அரண்மனை படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது கல்யாண புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'இந்த 20 வருடத்தில் எதுவுமே மாறவில்லை. இன்றுவரை நான் பேசி கொண்டே இருக்கிறேன், நீங்கள் புன்னகையுடன் கேட்டு கொண்டே இருக்கிறீர்கள், மேலும் தனது கல்யாணத்துக்கே லேட்டாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்களாக தான் இருப்பீர்கள். அதுதான் நீங்கள்' என அவர் பதிவிட்டுள்ளார்.
Nothing has changed over these 20yrs..till date i do the talking and you just listen to me with a smile. 🤣🤣🤣🤣 And probably you are the only groom who came late for his own wedding 😄😄😄😄But then that's you..🤗🤗🤗 Happy anniversary my pillar of strength.❤❤❤❤❤❤ pic.twitter.com/EcZf2jQdLI
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 9, 2020