இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான கேஜிஎஃப் யாஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரஷாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

KGF star Yash welcome their second child a baby boy

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் யாஷ், ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் கடந்த 2016ம் ஆண்டு ராதிகா பண்டித் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இவரது மனைவி ராதிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார், அவருக்கு நடந்த சீமந்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின. தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, ரசிகர்கள் இந்த சந்தோஷ செய்தியை கொண்டாடுகிறார்கள்.

Tags : KGF, Yash