KGF 2-ல் ராக்கி பாயுடன் அதகளம் பண்ண ரெடியான 'அதிரா'!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 25, 2019 04:58 PM
கன்னட திரையுலகில் அதிக பொருட் செலவில் உருவாகி இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ‘KGF’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் KGF.பிரஷாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதில் ராக்கி பாயாக யாஷ் நடித்து வரும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் ‘அதீரா’ எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அவரது கேரக்டர் போஸ்டர் வெளியானதையடுத்து, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.