வெறித்தனம் ! - ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிகிலுக்காக முதன்முறையாக பாடும் தளபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட் தயாரிப்பில் அட்லி இயக்கி தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Vijay sings Verithanam first time for AR Rahman in Atlee's Bigil

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்துக்கு விவேக் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். மெர்சல், சர்கார் படங்களுக்கு பிறகு விஜய், விவேக், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படம் என்பதால் இந்த படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

அதன்படி இந்த படத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று மாலை வெளியாகவுள்ளதாக அரச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார். அதன் படி வெளியான அந்த அறிவிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் முதல் முறையாக பாடவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், 'ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாட ஒப்புக்கொண்டதற்கு தளபதி விஜய்க்கு மிகப் பெரிய நன்றி. என்னை நம்புங்கள் பாடல் வெறித்தனமாக வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லி, பாடலாசிரியர் விவேக் ஆகியோருக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.