பாலிவுட்டில் அறிமுகமாகும் தென்னிந்திய நடிகையர் திலகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Keerthy Suresh to make her Hindi debut in Amit Sharma's film produced by Boney Kapoor

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற ‘சர்கார்’ திரைப்படத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் கடந்த ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குநர் அமித் ஷர்மா இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவிருக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 166’ திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக பரவிய செய்தியும் நமக்கு கிடைத்த தகவலின்படி மறுக்கப்பட்டுள்ளது.