கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "மிஸ் இந்தியா" டீஸர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கீர்த்தி சுரேஷின் அடுத்த ஹிரோயின் செண்ட்ரிக் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது

Keerthy Suresh's next titled Miss India Teaser Out in youtube

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். மஹாநடி படத்தின் மூலம் தனது மவுசை ஏற்றிக்கொண்ட கீர்த்தியின் நடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில், கீர்த்தி தரமான கதாபாத்திரங்ககளை மட்டுமே தேர்வு செய்து வருகிறாராம். அந்த வகையில் தற்போது தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளராம்.

ஹீரோயினை மையப்படுத்திய உருவாகவுள்ள இப்படத்திற்கு "மிஸ் இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் ஹோம்லியாகவும் பின்னர் மார்டனாகவும் தோற்றமளிக்கிறார் கீர்த்தி. இது கீர்த்தி சுரேஷின் 20வது படம் என்பது சிறப்பு தகவல்.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "மிஸ் இந்தியா" டீஸர் இதோ! வீடியோ