Veetla Vishesham Others Page USA

மணிவண்ணன் மறைவு.. பிரசாந்தின் முடிவுறாத பிரம்மாண்ட படம்.. பரவும் Throwback பதிவு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரை உலகில் இயக்குனராக தம்முடைய பயணத்தை தொடங்கியவர் மணிவண்ணன். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் திரைப்படத்துக்கு கதை எழுதிய மணிவண்ணன் பிற்காலத்தில் பெரும் நடிகராக மலர்ந்தார். நடிப்பு, இயக்கம், கதை-வசனம் என தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பங்காற்றிய மணிவண்ணன், சுமார் 50 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் சத்யராஜை வைத்து அதிக திரைப்படங்களை இயக்குனர் மணிவண்ணன் இயக்கியிருக்கிறார்.

Actor Prashanth Throwback post Manivannan death anniversary

Also Read | பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படம்.. அமிதாப் கொடுத்த வேற லெவல் அப்டேட்!

அரசியல் - நையாண்டி ரக திரைப்படங்களில் மணிவண்ணனின் நடிப்பும், அவருடைய வசனமும் இன்றளவும் பலராலும் பாராட்டப் படுவதாகவும் எக்காலத்திற்கும் ஏற்றவையாக இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிடுவதுண்டு. இயக்குநர் மணிவண்ணனுக்கு செங்கமலம் என்கிற மனைவியும், ரகுவண்ணன் என்கிற மகனும், ஜோதி என்கிற மகளும் உள்ளார்கள்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி நடிகர் மணிவண்ணனின் மறைவு திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. அவருடைய நெருங்கிய நண்பரான நடிகர் சத்தியராஜ் தம்முடைய ஆற்றாமையை அந்த நேரத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இயக்குனர் மணிவண்ணன் இறந்து 9 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் அந்த நேரத்தில் நடிகர் பிரசாந்த் பதிவிட்ட ஒரு பதிவு இப்போது அனைவராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது.

Actor Prashanth Throwback post Manivannan death anniversary

90-கள் முதலே தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக, அனைவருக்கும் பிடித்தமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரசாந்த். பல வெற்றிப்படங்களின் நாயகனான பிரசாந்துடன் முன்னணி நாயகிகள் பலரும் நடித்திருக்கின்றனர். அடுத்ததாக நடிகர் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது.  முன்னதாக ராஜ்கபூர் இயக்கத்தில் என்ன விலை அழகே என்கிற திரைப்படத்தில் பிரசாந்த் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தில் விஜய்யின் புதிய கீதை திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகை அமிஷா படேல் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Actor Prashanth Throwback post Manivannan death anniversary

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் மணிவண்ணன், விஜயகுமார், ரகுவரன், சுகுமாரி, செந்தில், பொன்னம்பலம் என பல நடிகர்கள் நடிக்கவிருந்தது. ஆனால் சில சிக்கல்களால் படத்தை தொடர முடியாமல் போனது. இதுபற்றி தம்முடைய பேஸ்புக் பக்கத்தில் விளக்கியிருந்த நடிகர் பிரசாந்த், “கதாநாயகி அமிஷா படேலுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருந்ததால் அவரால் தொடர்ந்து நம்முடைய படத்தில் நடிக்க முடியாமல் போனது, நடிகர்கள் ரகுவரன், சுகுமாரி உள்ளிட்ட நடிகர்களின் மறைவைத் தொடர்ந்து தற்போது நடிகர் மணிவண்ணன் அடைந்திருக்கிறார். இதனால் இந்த திரைப்படம் முழுமை பெறாமல் போய்விட்டது. முறையான மாற்றங்களைப் புகுத்தி மீண்டும் இந்த திரைப்படத்தை எடுப்பதற்காக ராஜ்கபூர் முயற்சித்து வருகிறார். அனைத்தும் முடிவு செய்யப்பட்ட பிறகு படப்பிடிப்பு தொடரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Actor Prashanth Throwback post Manivannan death anniversary

மணிவண்ணன் மறைந்த இரண்டு மாதம் கழித்து பிரசாந்த் இப்படி ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டு இருந்தார். இந்த படக்குழுவினருள் இறுதியாக மறைந்த நடிகர் மணிவண்ணனை குறிப்பிட்டு பிரசாந்த் பதிவிட்ட இந்த பதிவு தற்போது மணிவண்ணனின் இந்த நினைவு நாளில் பலராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது.

Also Read | ஹீரோவாகிறார்.. சன்னி லியோனை வைத்து படமெடுக்கவிருந்த பிரபல இயக்குநர்.!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prashanth Throwback post Manivannan death anniversary

People looking for online information on Enna Vilai Azhage, Manivannan, Prashanth will find this news story useful.