அனிருத் இசையில் ‘கனா’ ஸ்டார் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கனா’ திரைப்படத்தின் ஹீரோ தர்ஷன் நடிப்பில் உருவாகி வந்த ‘தும்பா’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.

Kanaa actor Dharshan's next film, Thumba shooting has been wrapped up

இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கியுள்ள இப்படத்தின் தர்ஷனுக்கு ஜோடியாக பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் அனிருத் இசையமைத்து பாடிய ‘புதுசாட்டம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரீகல் ரீல்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரில் உருவாகியுள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில், அட்வெஞ்சர் படமாக உருவாகியுள்ள ‘தும்பா’ திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே மாதம் ரிலீசாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.