தும்பா படத்தில் இருந்து வெளியான சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கனா' படத்தின் வெற்றிக்கு பிறகு தர்ஷன் நடிக்கும் படம் 'தும்பா'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார்.

Kanaa Darshan and Anirudh's Thumbaa Got U Certificate

இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமாரின் உதவியாளர் ஹரீஷ் ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் விஜய் டிவி புகழ் தினாவும் நடிக்கவிருக்கிறாராம்.

.இந்த படத்துக்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கவுள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.