'கனா' தர்ஷன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் ஹரிஷ் இயக்கியுள்ள படம் 'தும்பா'. இந்த படத்துக்கு அனிருத். விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைக்க நரேஷ் இலன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இருந்து அனிருத் இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஜிலேப்ரா என்ற பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
இந்த பாடலுக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, விவேக் சிவா, மெர்வின் சாலமன், ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை கு. கார்த்திக் எழுதியுள்ளார். ஆட்டம் போட வைக்கக் கூடிய குத்துப்பாடலாக இந்த பாடல் உருவாகியுள்ளது.
ஜிலேப்ரா - 'தும்பா'வில் இருந்து வெளியான பாடல் புரோமோ வீடியோ