கவிதாலயா- Behindwoods கூட்டணியில் வெப் சீரிஸாக உருவாகும் ஆன்லைன் பிளாக் பஸ்டர் ‘Yours Shamefully 3’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விக்னேஷ் கார்த்தில் இயக்கத்தியில் உருவான சென்சேஷனல் குறும்படமான ‘Yours Shamefully' Behindwoods-ன் யூடியூப் சேனலில் வெளியாகி செம வைரலானது. சவுந்தர்யா, கிருஷ்ண குமார், லிங்கேஸ்வரன் ஜெமினி உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் அமோக வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் விக்னேஷ் கார்த்திக் இயக்கினார்.

Kavithalaya Productions and Behindwoods jointly to produce Yours Shamefully 3 as a web series

இந்த படமும் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் Behindwoods-ன் யூடியூப் சேனலில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இந்த படத்தில் சவுந்தர்யாவுடன் விக்னேஷ் கார்த்திக்கும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு குறும்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, சற்று பெரிதாக இந்த படத்தின் அடுத்த பாகத்தை வெப் சீரிஸாக உருவாக்கும் முயற்சி தொடங்கியுள்ளது. இந்த வெப் சீரிஸை மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் Behindwoods நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இது குறித்து இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி கூறுகையில், ‘யூடியூப் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் பிரபலமான குறும்படம் ‘Yours Shamefully'. மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்த இந்த படத்தின் கதை தரமாக இருந்தது. அதனால், ‘Yours Shamefully 3’-ஐ வெப் சீரிஸாக தயாரிக்கவிருக்கிறோம். இதற்காக Behindwoods நிறுவனத்துடன் கைக்கோர்த்திருக்கிறோம். முந்தைய பாகங்களை போல் இந்த வெப் சீரிஸும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

குறும்படங்கள் மட்டுமல்லாது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தற்போது முழு நீள திரைப்படம் ஒன்றையும் இயக்கவிருக்கிறார். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘Yours Shamefully 3’ மட்டுமல்லாது கவிதாலயா புரொடக்ஷன்ஸ் பேனரில் இயக்குநர்கள் சரண், பிரியா, ஆர்.எஸ்.பிரசன்னா உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து 3 வெப் சீரிஸும் தயாராகவுள்ளது.

கவிதாலயா- BEHINDWOODS கூட்டணியில் வெப் சீரிஸாக உருவாகும் ஆன்லைன் பிளாக் பஸ்டர் ‘YOURS SHAMEFULLY 3’ வீடியோ