மா குறும்படங்களில் நடித்து அனைவரையும் கவரந்தவர் கனி. இவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தடயம். ஆனந்த விகடனில் வெளியான சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
கணபதி முருகேஷன் இந்த படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு மழை, பின்னணியில் ஒரு ரேடியோ சத்தமிட்டுக்கொண்டிருக்கிறது. அந்த ரேடியோவின் குரல், 'மழை பழைய நினைவுகளை கிழறிவிடும் என்கிறது. தொடர்ந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. இவை நமக்கு சொல்கிறது இந்த படம் எதைப் பற்றியது என்பதை.
கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் கனியை சந்திக்க செல்கிறார் கணபதி. அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய மௌனம் குடி கொண்டிருக்கிறது. ஒரு காட்சியில் டிவியில் கபாலி படத்தில் இடம் பெற்ற மாயநதி பாடல் ஓடுகிறது.
அதில் 'செத்து போயிருந்தனு நினச்சேன்' என்று ரஜினி சொல்ல, 'செத்து தான் போயிருந்தேன் நீ வர வரைக்கும்' என்பார் ராதிகா ஆப்தே. அப்போது கணபதியை பார்த்து புன்னகைப்பார் கனி. அழகியல் !
படம் முழுக்க இருவர். இருவருக்குள்ளும் அந்த உரையாடல் மிகவும் இயல்பாக இருக்கிறது. அந்த உரையாடலின் வழியே நாம் கதையை புரிந்துகொள்ளும் இடம் சிறப்பாக இருந்தது. பின்னணியில் எப்பொழுதுமே கேட்டுக் கொண்டிருக்கும் அந்த மழையின் சத்தம் காட்சிக்கு மேலும் உயிர்ப்பூட்டுகிறது. இறுதிக்காட்சிகளில் மனதுக்குள் ஒரு இருக்கம் ஏற்படுகிறது.
கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உருக்கமான காதல் கதை - யூடியூபில் வெளியான படம் இதோ வீடியோ