"கொரோனா கொரோனா" - வைரமுத்து எழுதி, எஸ்.பி.பி. குரலில் வெளியானது 'கொரோனா' பாடல்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் தற்போது வேகமாக பரவ வருகிறது. இந்நோய் காற்று, கொசு போன்றவைகளால் பரவாது என்றும், கைகள் மூலம் தொற்றி கண், வாய், மூக்கு இவைகளின் மீது படும் போது, பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளில் அடைந்து இருக்கின்றனர். 21 நாட்கள் தடை சட்டம் விதித்து அரசு அறிவித்துள்ளது.

கவி பேரரசு வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. குரலில் வெளியானது கொரோனா பாடல் Corona Anthem To Be Released In The Words Of Vairamuthu S

இந்நிலையில் பல சினிமா பிரபலங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கவி பேரரசு வைரமுத்துவின் வரிகளில் 'கொரோனா பாடல்' வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைத்து பாடியுள்ளார். இந்தப் பாடல் கொரோனா பரவும்  விதங்களை பற்றியும், மக்கள் தங்களை காத்து கொள்வது எப்படி என்றும் கூறுகிறது. இந்தப் பாடல் தற்போது வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

 

Entertainment sub editor