கதிர் - சூரியின் அதகள காமெடியுடன் வெளியான 'சர்பத்' டீஸர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 01, 2019 05:27 PM
நீலம் புரொடக்ஷன் சார்பாக ரஞ்சித் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்தில் நடித்த கதிருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது

அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் 'தளபதி 63' படத்தில் கதிர் நடித்திருந்தார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் கதிர் நடித்துவரும் 'சர்பத்' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு அஜீஸ் இசையமைக்க, பிரபாகரன் இந்த படத்தை இயக்கிவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வியகாம் 18 இன்டர்நேஷனல் ஆகியோர் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
-
கதிர் - சூரியின் அதகள காமெடியுடன் வெளியான 'சர்பத்' டீஸர் இதோ வீடியோ